நிகழ் மதிப்பீட்டு ஆண்டில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தத் துறை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "நிகழ் மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை 11 வரை 2 கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை 20-ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட 2 கோடி வருமான வரிக் கணக்குகளைவிட அதிகம்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 9 நாள்களுக்கு முன்பாகவே வருமான வரிக் கணக்குகள் 2 கோடியை எட்ட வரி செலுத்துவோர் உதவியுள்ளனர்.
இதுவரை வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யாதவர்கள், கடைசி நேர அவசரத்தை தடுக்க விரைந்து அதனை தாக்க செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.