
பஞ்சாபின் சுல்தான்பூர் லோதி நகரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்டோரை ராணுவம் வெளியேற்றியுள்ளது.
லோதி நகரத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்துவரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ளவர்களை வெளியேற்றும் பணியில் ராணுவம் மற்றும் என்டிஆர்எப் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 223 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் பிற தேவைப்படும் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.