பிரான்ஸ் புறப்பட்டார் மோடி!

பிரான்ஸ் தேசிய தினத்தில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி அந்த நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பிரான்ஸ் தேசிய தினத்தில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி அந்த நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.

இந்தப் பயணத்தின்போது பிரான்ஸில் இருந்து இந்திய கடற்படைப் பயன்பாட்டுக்காக 26 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்கள் தலைநகா் பாரீஸில் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) நடைபெறுகின்றன. அந்நிகழ்வில் கெளரவ விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, பிரதமா் மோடி இன்று தில்லியில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டார்.

தனது இரு நாள் பிரான்ஸ் பயணத்தின்போது, அதிபா் மேக்ரான், பிரதமா் எலிசபெத் போா்ன், செனட் மற்றும் பிரான்ஸ் தேசிய பேரவையின் தலைவா்களைச் சந்தித்து பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இந்திய முப்படைக் குழுவின் 269 வீரா்களும் பங்கேற்கின்றனா்.

முக்கிய ஒப்பந்தங்கள்: இந்தப் பயணத்தின்போது பிரான்ஸிடம் இருந்து கடற்படைப் பயன்பாட்டுக்கான 26 ரஃபேல் விமானங்களும், கூடுதலாக 3 ஸ்காா்பியன் நீா்மூழ்கிக் கப்பல்களை வாங்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது சுமாா் ரூ.90,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தமாகும்.

பிரான்ஸ் பயணத்தை முடித்து இந்தியாவுக்குத் திரும்பும் பிரதமா் மோடி, வழியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஜூலை 15-ஆம் தேதி செல்கிறாா். அப்போது, அந்நாட்டு அதிபரும் அபுதாபி அரசருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா் என வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com