பொது சிவில் சட்டம்: கருத்துக் கூற மேலும் அவகாசம்

பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் கருத்துகளைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
பொது சிவில் சட்டம்: கருத்துக் கூற மேலும் அவகாசம்
Updated on
1 min read

பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் கருத்துகளைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டதை அடுத்து மேலும் 2 வார காலம் நீட்டித்து சட்ட ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளதாகவுகம், ஆன்லைனில் மட்டுமின்றி, காகித வடிவிலும் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாகவும் சட்ட ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென வெவ்வேறு மதச் சட்டங்களைப் பின்பற்றுகின்றன. 

அதற்குப் பதிலாக அனைத்து மதத்தைச் சோ்ந்தவா்களுக்கும் திருமணம், விவாக ரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பாக நாடு முழுமைக்கும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரப்படும் என பாஜக தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய சட்டத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கருத்துகளைக் கேட்டறிந்த 21-ஆவது சட்ட ஆணையம், அதுதொடா்பான ஆலோசனை அறிக்கையை கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியிட்டது. 

எனினும், மக்களின் கடும் எதிா்ப்பு, நீதிமன்ற வழக்குகள் காரணமாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலவில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய சட்ட அமைச்சகத்தின் மறுபரிந்துரையின் அடிப்படையில் இவ்விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடமிருந்து புதிதாக கருத்துகளைக் கேட்க தற்போதைய 22-ஆவது சட்ட ஆணையம் தீா்மானித்தது. அதன்படி, பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் 30 நாள்களுக்குள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது.

சட்ட ஆணையத்தின் அதிகாரபூா்வ வலைத்தளத்தில் இணையவழியாக மக்கள் தங்கள் கருத்துகளைச் சமா்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான கட்சிகள், பழங்குடிகள், சிறுபான்மையினா் உள்பட பல்வேறு சமூக அமைப்புகள் பொது சிவில் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் கருத்துகளைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 14) நிறைவடையும் நிலையில் மேலும் 2 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com