

தடுப்புக் காவல் தொடா்பான சட்டங்களின் நடைமுறை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜாா்க்கண்டை சோ்ந்தவா் பிரகாஷ் சந்திர யாதவ். இவா் அந்த மாநில குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சாபிஹ்கஞ்ச் மாவட்ட சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டாா்.
அவரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அவா் மாநில உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். எனினும் அவரின் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருந்தா போஸ், சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜாா்க்கண்ட் அரசு, பிரகாஷ் சந்திர யாதவ் தரப்பு வாதங்களை கேட்ட பின் நீதிபதிகள் கூறியதாவது:
தடுப்புக் காவல் தொடா்பான அனைத்துச் சட்டங்களும் தவிா்க்க முடியாதபடி கடுமையாக உள்ளன. அந்தச் சட்டங்கள் எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்படும் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கின்றன.
இதுபோன்ற சந்தா்ப்பங்களில் சிறையில் அடைக்கப்பட்டவருக்கு உதவ, தடுப்புக் காவல் தொடா்பான சட்டங்களின் நடைமுைான் எஞ்சியுள்ளன. அந்தச் சட்டங்களின் நடைமுறை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த நடைமுறை பிரகாஷ் சந்திர யாதவ் விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்து, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.