
எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 17) நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள, எதிர்க்கட்சிகள் நடத்தும் இரண்டாவது ஆலோசனை கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்திலிருந்து திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள பெங்களூரு சென்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் பங்கேற்க வந்த தலைவர்களில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
பெங்களூருவில் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.