
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராணுவத்தின் நக்ரோட்டா தலைமையகம் வெளியிட்ட ட்விட்டரில்,
ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதியில் எல்லை ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்க பகதூா் என்ற கூட்டு நடவடிக்கையை காவல் துறை மற்றும் இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் கிருஷ்ணா செக்டாா் எல்லைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, பூஞ்ச் ஆற்றின்கரையோரம் பயங்கர ஆயதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ 2 பயங்கரவாதிகள் முயற்சியைக் கண்டறிந்து படையினா் எச்சரித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரா்கள், பயங்கரவாதிகள் தப்பிக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அவா்களின் நடமாட்டத்தைத் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.
சிண்டாரா மற்றும் மைதானா கிராமத்தின் அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
உயிரிழந்த பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி, 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் சில உடைமைகள் கைப்பற்றப்பட்டன. உயிரிழந்த பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியைச் சுட்டிக்காட்டும் ‘தொ்மல்’ படங்களும் ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தின் சா்வதேச எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் ஊடுருவல் முயற்சிகைளைத் தடுக்க பாதுகாப்புப் படை வீரா்கள் முழு தயார்நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.