மணிப்பூர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி

மணிப்பூர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மோடி

மணிப்பூர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.

இதுகுறித்து கடந்த 2 மாதங்களாக கருத்து தெரிவிக்காமல் இருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல்முறையாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு செய்தியாளர்களிடம் மோடி பேசியது:

“மணிப்பூர் சம்பவத்தில் ஈடுபட்ட எந்த குற்றவாளியும் தப்ப மாட்டார்கள் என்று நான் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். மணிப்பூரின் பெண்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது.

வலியாலும், கோபத்தாலும் என் இதயம் நிறைந்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த சம்பவம் நம் சமுதாயத்திற்கு வெட்கக்கேடானது.

அனைத்து மாநில முதல்வர்களும் மாநில சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறவும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தவும் அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com