
மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் உச்சநீதிமன்றம் தலையிடும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.
இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கிய கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலான நிலையில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்; கூட்டுப் பாலியல்: மணிப்பூரில் கொடூரம்
இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது:
மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடுமை மிகவும் கவலை அளிக்கின்றது. இந்த சம்பவத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் உச்சநீதிமன்றம் தலையிடும்.
கலவர பகுதிகளில் பெண்கள் ஒரு கருவியாக பயன்படுத்துவது அரசியலைப்பு துஷ்பிரயோகத்தின் உச்சம். அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுகள் மிக குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.