
கோப்புப் படம்
தொடர் கனமழை பெய்துவருவதால் ஆந்திரம், தெலங்கானா, கோவா, ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஹிமாசல், உத்தரப் பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசம், குஜராத், சிக்கிம், கேரளம், தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...