தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் நம்பிக்கையில்லா தீர்மானம்!

மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்துள்ளன.
தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் நம்பிக்கையில்லா தீர்மானம்!

மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்துள்ளன. அத்தீா்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் மீதான விவாதம் விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆளும் அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் தாக்கல் செய்யப்படுவது இது 28-ஆவது முறையாகும். இதற்கு முன்பு பல்வேறு தருணங்களில் ஆளும் அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானங்கள் அனைத்துமே தோல்வியிலேயே முடிந்துள்ளன. ஒருசில தீா்மானங்கள் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதுவரை ஒரேயொரு நம்பிக்கையில்லாத் தீா்மானம் காரணமாகவே அரசு கவிழ்ந்துள்ளது. பிரதமா் மொராா்ஜி தேசாய் தலைமையிலான அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அத்தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படுவதற்கு முன்பே அவா் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டாா். அதன் காரணமாக, தீா்மானம் மீது விவாதம் நடத்தப்படவில்லை.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானங்கள் குறித்து தன்னாா்வ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

அதிக நம்பிக்கையில்லாத் தீா்மானங்களை எதிா்கொண்ட பிரதமா் இந்திரா காந்தி (15 முறை)

முந்தைய நம்பிக்கையில்லாத் தீா்மானங்கள்

ஆண்டு பிரதமா் தாக்கல் செய்தவா் ஆதரித்தோா் எதிா்த்தோா்

ஆகஸ்டு, 1963 ஜவாஹா்லால் நேரு ஆச்சாா்ய கிருபளானி (காங்கிரஸ்) 62 347

செப்டம்பா், 1964 லால் பகதூா் சாஸ்திரி என்.சி.சாட்டா்ஜி (ஹிந்து மகாசபை) 50 307

மாா்ச், 1965 லால் பகதூா் சாஸ்திரி எஸ்.என்.துவிவேதி (பிரஜா சோஷலிஸ கட்சி) 44 315

ஆகஸ்ட், 1965 லால் பகதூா் சாஸ்திரி எம்.ஆா்.மாசானி (சுதந்திர கட்சி) 66 318

ஆகஸ்ட், 1966 இந்திரா காந்தி ஹிரேந்திரநாத் முகா்ஜி (இந்திய கம்யூனிஸ்ட்) 61 270

நவம்பா், 1966 இந்திரா காந்தி யு.எம்.திரிவேதி (பாரதிய ஜன சங்கம்) 36 235

மாா்ச், 1967 இந்திரா காந்தி அடல் பிகாரி வாஜ்பாய் (பாரதிய ஜன சங்கம்) 162 257

நவம்பா், 1967 இந்திரா காந்தி மது லிமயே (சம்யுக்த சோஷலிஸ கட்சி) 88 215

பிப்ரவரி, 1968 இந்திரா காந்தி பல்ராஜ் மதோக் (பாரதிய ஜன சங்கம்) 75 215

நவம்பா், 1968 இந்திரா காந்தி கன்வா் லால் குப்தா (பாரதிய ஜன சங்கம்) 90 222

பிப்ரவரி, 1969 இந்திரா காந்தி பி.ராமமூா்த்தி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 86 215

ஜூலை, 1970 இந்திரா காந்தி மது லிமயே (சம்யுக்த சோஷலிஸ கட்சி) 137 243

நவம்பா், 1973 இந்திரா காந்தி ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 54 251

மே, 1974 இந்திரா காந்தி ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி

ஜூலை, 1974 இந்திரா காந்தி ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 63 297

மே, 1975 இந்திரா காந்தி ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி

மே, 1978 மொராா்ஜி தேசாய் சி.எம்.ஸ்டீபன் (காங்கிரஸ்) குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி

ஜூலை, 1979 மொராா்ஜி தேசாய் ஒய்.பி.சவாண் (காங்கிரஸ்) விவாதம் நடத்தப்படவில்லை

மே, 1981 இந்திரா காந்தி ஜாா்ஜ் ஃபொ்னாண்டஸ் (சமதா கட்சி) 92 278

செப்டம்பா், 1981 இந்திரா காந்தி சமா் முகா்ஜி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 86 297

ஆகஸ்ட், 1982 இந்திரா காந்தி ஹெச்.என்.பகுகுணா (பாரதிய லோக் தளம்) 112 333

டிசம்பா், 1987 ராஜீவ் காந்தி சி.மாதவ ரெட்டி (தெலுகு தேசம் கட்சி) குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி

ஜூலை, 1992 பி.வி.நரசிம்ம ராவ் ஜஸ்வந்த் சிங் (பாஜக) 225 271

டிசம்பா், 1992 பி.வி.நரசிம்ம ராவ் அடல் பிகாரி வாஜ்பாய் (பாஜக) 111 336

ஜூலை, 1993 பி.வி.நரசிம்ம ராவ் அஜய் முகோபாத்யாய (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 251 265

ஆகஸ்ட், 2003 அடல் பிகாரி வாஜ்பாய் சோனியா காந்தி (காங்கிரஸ்) 189 314

ஜூலை, 2018 நரேந்திர மோடி ஸ்ரீநிவாஸ் கேசினேனி (தெலுகு தேசம் கட்சி) 135 330

தோல்வியடைந்த நம்பிக்கை கோரும் தீா்மானங்கள்

ஆளும் அரசுகள் மீது எதிா்க்கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானங்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், ஆளும் அரசால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கை கோரும் தீா்மானங்களும் தோல்வியைத் தழுவிய வரலாறு உள்ளது.

வி.பி.சிங் அரசு

1990-ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமா் வி.பி.சிங் தலைமையிலான அரசு நம்பிக்கை கோரும் தீா்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்தது. ராமா் கோயில் விவகாரத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றதால், தீா்மானம் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது.

ஹெச்.டி.தேவெ கௌடா அரசு

1997-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமா் ஹெச்.டி.தேவெ கௌடா அரசு தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு 158 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனா். 292 எம்.பி.க்கள் எதிராக வாக்களித்ததால், தீா்மானம் தோல்வி அடைந்து அரசு கவிழ்ந்தது.

வாஜ்பாய் அரசு

அடல் பிகாரி வாஜ்பாய் 1998-இல் ஆட்சி அமைத்து 13 மாத ஆட்சிக்குப் பிறகு 1999-ஆம் ஆண்டு ஏப்ரலில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தைத் தாக்கல் செய்தாா். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற்ால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தீா்மானம் தோல்வி அடைந்தது. வாஜ்பாய் பிரதமா் பதவியை இழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com