பாஜகவும், பிரதமர் மோடியும் ஒன்றுதான்; இனி ஆட்சியில் இருக்கக்கூடாது: அகிலேஷ்

மணிப்பூர் நிலைமையைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம் இனி ஆட்சியில் இருக்கக்கூடாது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 
பாஜகவும், பிரதமர் மோடியும் ஒன்றுதான்; இனி ஆட்சியில் இருக்கக்கூடாது: அகிலேஷ்

மணிப்பூர் நிலைமையைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம் இனி ஆட்சியில் இருக்கக்கூடாது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 

மணிப்பூரில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் கலவரம் மற்றும் அங்கு பெண்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் வெளிவந்துள்ளது, நாடு முழுவதுமே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும், பிரதமர் மோடி இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. 

நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 'பாஜகவும், பிரதமர் மோடியும் ஒன்றுதான். ஆர்எஸ்எஸ் பரப்பிய வெறுப்பு மற்றும் பாஜகவின் வாக்கு வங்கி அரசியலே, மணிப்பூரின் தற்போதைய நிலைக்குக் காரணம். ஒரு அரசு நாட்டில் நாடாகும் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். முடியும். புலனாய்வு அமைப்புகளுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இதையெல்லாம் அரசாங்கம் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தால் அவர்கள் இனி ஆட்சியில் இருக்கக்கூடாது' என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com