கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மழை குறைவாக பெய்ததால் விவசாயிகள் கவலையடைய தேவையில்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத்

உ.பி.யில் பல்வேறு மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :29 ஜூலை 2023, 10:59 am

DIN

உ.பி.யில் பல்வேறு மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தேவையான சில அறிவுரைகளை அவர் வழங்கினார். அதில், மழை குறைவாக பெய்தாலும், அதிகமாக பெய்தாலும் விவசாயிகள் கவலைப்பட வேண்டாம், ஒவ்வொரு கட்டத்திலும் அரசு துணை நிற்கிறது. 

மக்களுக்கு உணவு வழங்கும் விவசாயிகளின் நலன்களே அரசின் முன்னுரிமை. 

எனவே, குறைவான மழையினால் ஏற்படும் பாதிப்புகளை கணக்கெடுப்பு மூலம் துல்லியமாக மதிப்பிட வேண்டும். நீர்த்தேக்கங்களில் குவிந்துள்ள வண்டல் மண்ணை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட அவர், மழை குறைந்தால் மாற்று பயிர்களை விதைக்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார். 

மேலும் போதிய மழைப்பொழிவு குறித்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்புமாறும் அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.