காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? சித்தராமையா பதில்

காங்கிரஸ் அளித்த முக்கிய 5 வாக்குறுதிகள் இந்த நிதியாண்டிலேயே நிறைவேற்றப்படும் என்று மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..


பெங்களூரு: கர்நாடக பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த முக்கிய 5 வாக்குறுதிகள் இந்த நிதியாண்டிலேயே நிறைவேற்றப்படும் என்று மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இன்று கர்நாடக மாநில அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து முழுமையாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஐந்து முக்கிய வாக்குறுதிகளையும் இந்த நிதியாண்டிலேயே நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா தெரிவித்துள்ளார்.

200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு மாத உதவித் தொகை, 10 கிலோ இலவச அரிசி, 2 ஆண்டுகளுக்கு வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் ஆகிய ஐந்து வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது வெளியிட்டிருந்தது.

இதில் முதல்கட்டமாக, 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com