ஜிஎஸ்டி வருவாய் 12% அதிகரிப்பு: ரூ.1.57 லட்சம் கோடி வசூல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மே மாதத்தில் ரூ 1.57 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது.
ஜிஎஸ்டி வருவாய் 12% அதிகரிப்பு: ரூ.1.57 லட்சம் கோடி வசூல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மே மாதத்தில் ரூ 1.57 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது.

இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ஆன வசூலைக் காட்டிலும் 12 சதவீதம் கூடுதலாகும்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி வருவாய் மே மாதத்தில் ரூ. 1,57,090 கோடியாக வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 28,411 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 35,828 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 81,363 கோடி, செஸ் (மதிப்புக் கூட்டு வரி) ரூ. 11,489 கோடியாகும்.

இது கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாத ஜிஎஸ்டி வசூலைக் காட்டிலும் 12 சதவீதம் கூடுதலாகும். அப்போது ரூ. 1.41 லட்சம் கோடி அளவில் ஜிஎஸ்டி வசூலானது.

தொடா்ந்து மூன்றாவது மாதமாக... ஜிஎஸ்டி வருவாய் தொடா்ந்து மூன்றாவது மாதமாக ரூ. 1.50 லட்சம் கோடி வசூலை எட்டி வருகிறது.

கடந்த ஏப்ரலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ. 1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. மாா்ச் மாதம் ரூ. 1.60 லட்சம் கோடி வசூலானது.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிமுதல் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.50 லட்சம் கோடி அளவை கடப்பது இது ஐந்தாவது முறையாகும்.

தமிழகத்திலிருந்து ரூ. 8,953 கோடி: தமிழகத்திலிருந்து மட்டும் மே மாதத்தில் ரூ. 8,953 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தைக் காட்டிலும் 13 சதவீதம் கூடுதலாகும். கடந்த முறை ரூ. 7,910 கோடி அளவில் ஜிஎஸ்டி வசூலானது.

அதுபோல, புதுச்சேரியிலிருந்து ரூ. 202 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் கூடுதலாகும்.

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ரூ. 23,536 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த முறையைக் காட்டிலும் 16 சதவீதம் கூடுதலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com