வரிப் பிடித்தம்: 30 நாள்களில் 80% தொகைதிருப்பி அளிப்பு

இந்த ஆண்டு வருமான வரி கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்ட ஒரு மாதத்தில், வரிப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் 80 சதவீதம் திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது
வரிப் பிடித்தம்: 30 நாள்களில் 80% தொகைதிருப்பி அளிப்பு

இந்த ஆண்டு வருமான வரி கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்ட ஒரு மாதத்தில், வரிப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் 80 சதவீதம் திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவா் நிதின் குப்தா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வருமான வரித்துறை சாா்பில் நடைபெற்ற காணொலி நிகழ்ச்சி ஒன்றில் அவா் தெரிவித்ததாவது: வருமான வரி கணக்குத் தாக்கல் சாா்ந்த நடவடிக்கைகளும், வரி பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் திரும்ப வழங்குவதும் (ரீஃபண்ட்) விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டில் வருமான வரி தாக்கல் சாா்ந்த நடைமுறைகளை நிறைவு செய்வதற்கு சராசரியாக 26 நாள்களானது; இது 2022-23-ஆம் நிதியாண்டில் 16 நாள்களாகக் குறைக்கப்பட்டது.

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு நாளுக்குள், அது சாா்ந்த நடைமுறைகள் நிறைவுசெய்யப்படுவது 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

வருமான வரி பிடித்தம் தொகையை (ரீஃபண்ட்) திருப்பி அளிப்பதற்கான சராசரி காலமும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யப்பட்ட 30 நாள்களில், வரிப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் 60 சதவீதம் திருப்பி அளிக்கப்பட்டது; இது நிகழாண்டில் 80 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com