இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு: ஒடிசா ரயில் விபத்து குறித்து சரத் பவார் 

ஒடிசா ரயில் விபத்து ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். 
இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு: ஒடிசா ரயில் விபத்து குறித்து சரத் பவார் 

ஒடிசா ரயில் விபத்து ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். 
இது குறித்து புணேவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையும் என்றார். ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 
பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 747 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் 56 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
ஒடிசா ரயில்கள் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com