
ஒடிசாவின் பாலாசோரில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 31 பேர் மாயமாகியுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா இன்று பிற்பகல் ஒடிசாவுக்கு வந்தார். பின்னர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
கட்டாக்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ரயில் விபத்து நடைபெற்ற தினத்தில் மேற்கு வங்கத்திலிருந்து பலர் கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரையும் தொடர்புகொள்ள முயன்றோம். சிலரை தொடர்புகொள்ள முடிந்தது, சிலரை அணுக முடியவில்லை.
படிக்க: சென்னையில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!
இதுவரை 103 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 83 பேரின் உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் 31 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
ஜூன் 2ம் தேதி ஒடிசாவில் நிகழ்ந்த கொடூரமான ரயில் விபத்து அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...