
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல உதவும் வகையில் போக்குவரத்து செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என அம்மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில், உடல்களை எடுத்துச்செல்லும் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். சாலைப்பயணத்தில் உடலை எடுத்துச்சென்றால், அரசு சார்பில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் மார்க்கமாக எடுத்துச்செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அடையாளம் காண முடியாத உடல்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எவ்வித சிரமத்தையும் கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.
3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...