
ஒடிசாவின் பாலாசோரில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பிகாரைச் சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
பிகார் பேரழிவு மேலாண்மைத் துறையின் தகவலின்படி,
முன்னதாக 35 பேர் பலியானதாகக் கூறப்பட்ட நிலையில், புதன்கிழமை நிலவரப்படி பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 47 பேர் காயமடைந்துள்ளனர். 18 பேர் காணவில்லை. பலியானவர்களில் இதுவரை 28 பேரில் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பிகார் அரசு நான்கு அதிகாரிகளைக் கொண்ட குழுவை பாலாசோருக்குக்கு அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இறந்த உடல்களை அடையாளம் காண அவர்கள் உதவி வருகின்றனர். சிலரின் உடல்கள் அடையாளம் காண்பது கடினம் என்பதால் அவர்கள் டி.எ.ஏ சோதனைக்கு அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கின்றனர்.
படிக்க: ஒடிசா ரயில் விபத்து: 123 உடல்களுக்கும் உடல் கூறாய்வு முடிந்தது
கடந்த நான்கு நாள்களில் டிஎன்ஏ சோதனைக்கு ஆறு நபர்களின் மாதிரிகளை சோதனை செய்தது. அவர்கள் பூர்னியா, சமஸ்திபுர், ஷேக்புரா, பெகுசாராய், கயா மற்றும் கிழக்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையில், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் செவ்வாய்க்கிழமை, தலைமைச் செயலாளர், பேரழிவு மேலாண்மை ஆணையர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, விபத்துக்குப் பின்னர் எழும் நிலைமையை மதிப்பாய்வு செய்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...