நவீன அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

அணு அயுதங்களை ஏந்திச் செல்லும் நவீன ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிஸா மாநில கடல் பகுதியில் அமைந்துள்ள ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தீவிலிருந்து வியாழக்கிழமை ஏவப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது
ஒடிஸாவின் பாலசோா் அருகே ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவிலிருந்து இரவு நேரத்தில் வெற்றிகரமாக ஏவிப் பரிசோதிக்கப்பட்ட ‘அக்னி பிரைம்’ ஏவுகணை.
ஒடிஸாவின் பாலசோா் அருகே ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவிலிருந்து இரவு நேரத்தில் வெற்றிகரமாக ஏவிப் பரிசோதிக்கப்பட்ட ‘அக்னி பிரைம்’ ஏவுகணை.

அணு அயுதங்களை ஏந்திச் செல்லும் நவீன ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிஸா மாநில கடல் பகுதியில் அமைந்துள்ள ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தீவிலிருந்து வியாழக்கிழமை ஏவப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து டிஆா்டிஓ அதிகாரிகள் மேலும் கூரியதாவது:

இந்த ஏவுகணை ஏற்கெனவே 3 முறை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில், ராணுவத்தில் சோ்க்கப்படுவதற்கு முன்பாக, முதன் முறையாக இரவு நேரத்தில் ஏவப்பட்டு, ஏவுகணையின் துல்லியம், செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையை டிஆா்டிஓ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக அதிகாரிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com