

பைபார்ஜாய் புயல் வரும் 15ஆம் தேதி குஜராத்தின் மான்ட்வி-பாகிஸ்தானின் கராச்சி இடையே அதி தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை மாலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பைபார்ஜாய் புயலாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்த புயலானது போர்பந்தருக்கு 420 கிமீ தெற்கு-தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 460 கிமீ தெற்கு-தென்மேற்கிலும் அதி தீவிர புயலாக மையம் கொண்டுள்ளது.
பைபார்ஜாய் புயல் மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்வதாகவும் இது ஜூன் 15ஆம் தேதி நண்பகல் குஜராத்தின் மான்ட்வி-பாகிஸ்தானின் கராச்சி இடையே சௌராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பைபார்ஜாய் புயல் காரணமாக மும்பை, குஜராத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் புயலை எதிர்கொள்ள குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.