

நியூயார்க்: கேரளா 'முற்போக்கு சிந்தனைகளின் கலங்கரை விளக்கமாக பிரகாசிக்கிறது,' அங்கு ஒவ்வொரு குரலும் முக்கியமானது மற்றும் ஒற்றுமையின் உணர்வு பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் என்று அமெரிக்காவில் நடந்த புலம்பெயர் மக்கள் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.
ஞாயிற்றுக்கிழமை டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற புலம்பெயர் மக்கள் கூட்டத்தில் உரையாற்றி பினராயி விஜயன், கடந்த ஆறு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். மாநிலத்தின் முற்போக்கான விழுமியங்கள், சமூக நல்லிணக்கம் மற்றும் சமமான வளர்ச்சி, பொதுப் பள்ளிகள், சுகாதார அமைப்பு, பிற துறைகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முதலீடுகள், அவரது நிர்வாகத்தால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை குறிப்பிட்டு பேசினார்.
மேலும், மாநிலமானது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் முன்மாதிரியாகவும், மக்களை மையமாகக் கொண்ட முன்னேற்றத்திற்கு எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளதாக கூறினார்.
இரக்கம் சமூக நீதி "ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதே எங்களின் கொள்கைகள்" என்றும், "ஒவ்வொருவரது குரலும் முக்கியமானது மற்றும் ஒற்றுமையின் குரல் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் முற்போக்கு சிந்தனைகளின் கலங்கரை விளக்கமாக கேரளா பிரகாசிக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.
கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளா உள்ளது என்றும், மாநிலத்தின் அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நாட்டிலேயே சிறந்தவை என்று நிதிஆயோக் உள்பட பல நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், "மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
மத நல்லிணக்கமும் அமைதியான சகவாழ்வும் உறுதி செய்யப்படுவதால் இவை அனைத்தும் சாத்தியமாகியுள்ளன. அதனால்தான் கடந்த பல ஆண்டுகளாக கேரளாவில் ஒரு வகுப்புவாத வன்முறைகள் நடக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
"உங்கள் நிலம் மேலும் மேலும் செழிக்க வரும் காலங்களில் எங்களுடன் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்" என்று அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மே மாதத்தில் கேரளா இந்தியாவின் முதல் முழுமையான மின்-ஆளுமை மாநிலமாக மாறியது என்றும், "சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட கேரள மாதிரி வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தில் இது ஒரு வரலாற்று மைல்கல்.
மின்-ஆளுமை மூலம், நாங்கள் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் வெற்றி பெறுள்ளோம்.
"பலதரப்பட்ட பொதுச் சேவைகளுக்கான தடையற்ற அணுகலை உறுதி செய்வதற்காக நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம், அவற்றில் 900க்கும் மேற்பட்டவை இப்போது ஆன்லைனில் கிடைக்கின்றன என்று முதல்வர் விஜயன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.