‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விண்ணைத் தொடும் தில்லி - மும்பை விமானக் கட்டணம்

தில்லி - மும்பை இடையே பயணிக்க 24 மணி நேரத்துக்கு முன் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.14 ஆயிரம்.

News image
Updated On :13 ஜூன் 2023, 6:17 am

DIN


மும்பை: தில்லி - மும்பை இடையே பயணிக்க 24 மணி நேரத்துக்கு முன் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.14 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது உலகளவில் மிக அதிகப்படியான கட்டணமாக மாறியிருக்கிறது.

என்னதான் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவந்தாலும் கூட, இந்தியாவிலிருந்து குறைந்த கட்டணத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா, தென்கொரியா நாடுகளுக்கே கடைசி நிமிடத்தில் விமான டிக்கெட் எடுத்துக் கொண்டு சென்றுவந்துவிடலாம்.

உலகிலேயே அதிக விமானக் கட்டணம் கொண்ட நாடு பிரேசில்தான். இங்கு 55 நிமிட பயணமான சா பாலோ - ரியோ டி ஜெனிரியோ நகரங்களுக்கு இடையே 24 மணி நேரத்துக்குள் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ.26,800 கட்டணம்.

நமது நாட்டில் தில்லி - மும்பைதான்  அதிகமானோர் பயணிக்கும் விமான வழித்தடம்.  இதுதான் பிரேசில் நாட்டுக்கு அடுத்தபடியாக அதிகக் கட்டணம் கொண்ட விமானப் பயணமாக உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.14,000. ஆனால், மும்பை - தில்லி இடையேயான விமானக் கட்டணம் ரூ.4,300 தான். இதுதான் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் மிகக் குறைவான விமானப் பயணக் கட்டணமாகும். வழக்கமாக, சென்று - வருவதற்கான கட்டணங்கள் ஒன்றுபோலத்தான் இருக்கும் என்றாலும், இந்த நகரங்களுக்கு இடையே கட்டண விவரம் வேறுபடுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.