அவசரச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
தில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையடுத்து தில்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கேஜரிவால்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களைத் சந்தித்து பேசினார்.
இதன் தொடர்ச்சியாக இன்று தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவை சந்தித்து அவசரச் சட்டத்துக்கு ஆதரவு கோரினார் கேஜரிவால்.
கேஜரிவாலின் கோரிக்கைக்கு ஏற்ப தில்லி அவசரச் சட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக டி.ராஜாவும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜி கைது: திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விதைகள் உறங்காது (சேலம் மண்வாசனை)

செவ்விலக்கியமும் சித்தர் இலக்கியமும்

நாளை என்ன வேலை? கல்லூரி படிப்பு பற்றிய வழிகாட்டி

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட குடும்பம்!
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

