
வந்தே பாரத் ரயில் மேலும் ஐந்து வழித்தடங்களில் ஜூன் 26 முதல் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
மும்பை- கோவா, பெங்களூரு- ஹூப்ளி, பாட்னா-ராஞ்சி, போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர் ஆகிய 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைப்பார்.
ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
அண்மையில் ஒடிஸாவில் மூன்று ரயில்கள் மோதி 288 பேர் பலியான சம்பவத்தையடுத்து அப்போது புதிதாக தொடங்கவிருந்த மும்பை-கோவா வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்பட்டது. தற்போது நிலைமை சீரானதை அடுத்து வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.