
சண்டிகர்: ஹரியாணா போக்குவரத்து காவல்துறை ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரையான சிறப்பு பிரசாரத்தின் கீழ் இது வரை 3,176 விதிமீறல்களுக்காக ரசீதுகளை வழங்கியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அனில் விஜ் இன்று தெரிவித்துள்ளார்.
பிரசாரத்தின் போது, வயது குறைந்த நபர்கள் வாகனம் ஓட்டியதற்காக இதுவரை 258 விதிமீறல்களுக்காக ரசீதுகள் வழங்கப்பட்டது. இந்த பிரசாரத்தின் போது பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 3,434 ரசீதுகள் வழங்கப்பட்டதாக அனில் விஜ் தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட வாரியான விவரங்களை வழங்கிய உள்துறை அமைச்சர், தெரிவித்ததாவது:
அம்பாலாவில் லேன் டிரைவிங் விதிமீறலுக்காக 609 பயணிகளுக்கும், சிறார் வாகனம் ஓட்டியதற்காக 44 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிர்சா மாவட்டத்தில் பாதை மீறல்களுக்காக 123 ரசீதும், சிறார் வாகனம் ஓட்டியதற்காக 14 ரசீதுகளும் வழங்கப்பட்டது.
குருஷேத்ரா மாவட்டத்தில் பாதை மீறல்களுக்காக 11 பேருக்கும், சிறார் வாகனம் ஓட்டியதற்காக 6 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்து.
குருகிராம் மாவட்டத்தில் லேன் டிரைவிங் விதிமீறல்களுக்காக 160 பேருக்கும், சிறார் வாகனம் ஓட்டியதற்காக 15 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்து.
இந்நிலையில் அண்டை மாவட்டமான ஃபரிதாபாத் மாவட்டத்தில் 646 பயணிகளுக்கு பாதை மீறல்களுக்காகவும், 38 சிறார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறுவதன் மூலம், அந்த நபர் தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மற்ற பயணிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார். போக்குவரத்து விதிகளை மீறுவதால் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அனைத்து பயணிகளும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது என்றார்.