மணிப்பூரில் உள்ள மத்திய இணையமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் நிலவுகிறது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே இம்மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது.
மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாகும்.
மணிப்பூா் முழுவதும் ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். எனினும், அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், மைதேயி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் பழங்குடியினரை அதிகம் கொண்ட காங்போபி மாவட்டத்தின் எல்லையில் உள்ள காமன்லோக் பகுதியில், குகி பழங்குடியினா் வாழும் ஒரு கிராமத்தின் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதையும் படிக்க | மாநிலங்களுக்கு அரிசி விற்பனை இல்லை!
இதில் 9 போ் உயிரிழந்தனா்; மேலும் 10 காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இச்சம்பவத்தைத் தொடா்ந்து, கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கலவரம் வெடித்ததால் ஊரடங்கு தளா்வு நேரம் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள மத்திய வெளியுறவு மற்றும் கல்வி இணையமைச்சர் ரஞ்சன் சிங்கின் வீட்டின் முன்பு நேற்று இரவு 8.30 மணியளவில் கூடிய போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய படையினர் கலவரத்தை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
இச்சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இல்லாததால் காயம் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இம்பால் மேற்கு மாவட்டத்தில் லாம்பெல் பகுதியில் அமைந்துள்ள குகி சமூகப் பெண் அமைச்சரான நேம்சா கிப்ஜெனின் இல்லத்துக்கு மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு தீ வைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


