ராஜஸ்தானில் கன மழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

ராஜஸ்தானில் பிபர்ஜாய் புயல் காரணமாக 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
ராஜஸ்தானில் கன மழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

ராஜஸ்தானில் பிபர்ஜாய் புயல் காரணமாக 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வடக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை மாலை மணிக்கு 6.30 மணியளவில் குஜராத்தின் கட்ச், செளராஷ்டிரா இடையே கரையைக் கடந்தது.

இந்நிலையில் ராஜஸ்தானின் பல இடங்களில் கன மழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 

அதன்படி மவுண்ட் அபு 210 மிமீ, பார்மரில் செட்வாவில் 136, அபு தெஹ்ஸில் மவுண்டில் 135, ஜலூரின் ரானிவாடாவில் 110, சுருவில் உள்ள பிடசாரியாவில் 76 மிமீ, ரோடாரில் 68, சான்சோரில் 59, பிண்ட்வாராவில் 57, கோகுண்டா மற்றும் கிர்வாவில் தலா 49, ஜலூரில் 47, சிண்ட்ரியில் தலா 46 மிமீ மற்றும் ஜலூரின் ஜஸ்வந்த்புரா, ஜடோலில் 40, அபு சாலையில் 38, கோட்டாவில் 35, சிரோஹியில் 30, கும்பல்கரில் 26 மற்றும் உதய்பூரில் 25.7 மிமீ மழை இன்று காலை 8.30 மணி வரை பதிவாகியுள்ளது. தெரிவித்தனர்.

புயலின் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் 1 மி.மீ முதல் 22 மி.மீ வரை மழைப் பதிவாகியுள்ளன. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், 

மேலும், பார்மர், ஜலூர், சிரோஹி, பாலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 30-50 கி.மீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீசக்கூடும். 

ஜெய்சால்மர், பிகானெர், ஜோத்பூர், சுரு, சிகார், நாகர், ஜுன்ஜ்ஹுனு, அஜ்மீர், உதய்பூர் மற்றும் ராஜ்சமந்த் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

மாநிலத்தின் சில பகுதிகளில் திங்கள்கிழமை வரை கனமழை தொடரும் என்று கணித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com