
அசாம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 142 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் அங்கு பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மேலும் தொடர்ந்து அடுத்த 5 நாள்களுக்கு கனமழை இருப்பதாகக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் கோக்ராஜ்ஹர், சிராங், பக்ஸ்சா, பர்பேட்டா, போன்கைகான் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசாமில் பெய்த கனமழையினால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் லக்கிம்பூர் பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 142 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...