பாகிஸ்தானில் நேற்று பெய்த கனமழைக்கு 7 பேர் பலி, 70 பேர் காயம்!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் பலியாகினர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இதுகுறித்து தேசிய பேரழிவு மேலாண்மை ஆணையம் கூறுகையில், 

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. 

மாகாணத்தின் பன்னு பிரிவில் கனமழைக்கு 5 பேர் பலியாகினர். 67 பேர் காயமடைந்தனர். அதேநேரத்தில் பெஷவரில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். 

மாகாணத்தின் பன்னு பிரிவின் ஆணையர் பெர்வைஸ் சபாட்கெல் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் மூன்று மாவட்டங்களில் பலத்த மழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் கிடைக்க மருத்தவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

பலத்த காற்று காரணமாக மாகாணத்தில்பல வீடுகள் சேதமடைந்தன. ஜூன் 10ல் பெய்த 
ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 27 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com