அசாமில் ஏற்கனவே வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இன்னும் 2,3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பல இடங்களில் வெள்ளம் வடியாமல், ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுத்திருப்பது அந்த மாநில மக்களை கவலையடையச் செய்துள்ளது.
அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 மாவட்டங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் 34000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் தொடர்ந்து 2,3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று வரை 444 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இன்று 523 கிராமங்களில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடானது. பல இடங்களில் மண்ணரிப்பும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. நேற்று வரை நிவாரண மையங்கள் எதுவும் செயல்படாமல் இருந்த நிலையில் கோக்ரஜாரில் உள்ள நிவாரண மையத்தில் 56 பேர் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 4 மாவட்டங்களில் 24 நிவாரண பொருட்கள் வழங்கும் மையம் செயல்பட்டு வருகிறது.
தற்போது பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் நீர்மட்டம் உயர்ந்திருந்தாலும் எந்த நதிகளும் அபாய நீர்மட்ட அளவை தாண்டவில்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.