
ராஜஸ்தானில் பிபர்ஜாய் புயலின் விளைவாக இந்தாண்டு இயல்பான அளவைவிட 220 சதவிகிதம் அதிக மழைபொழிவு பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர பிபா்ஜாய் புயல் கடந்த வாரம் குஜராத்தின் கட்ச், செளராஷ்டிரா இடையே கரையைக் கடந்தது.
இந்நிலையில், ராஜஸ்தானின் பார்மர், ஜோத்பூர், பாலி, சிரோஹி மற்றும் ஜலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், அஜ்மரில் கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால், பல ஆறுகள் மற்றும் அணைகள் நிரம்பின. பல கிராமங்கள் நீரில் மூழ்கி அதிக சேதமடைந்தது.
மாநிலத்தில் மொத்தம் 19 மாவட்டங்களில் அதீத கனமழை பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கிடையில் இந்தாண்டு சராசரியாக 28.74 விட, 92.09 மில்லி மீட்டர் அதிக மழைபொழிவாகும். அதாவது 220 சதவிகிதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.