2000 ரூபாய் நோட்டு ஏற்பு: அமேஸான் அறிவிப்பு
ரிசா்வ் வங்கியால் திரும்பப் பெறப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டு மூலம் தங்களிடம் பொருள்களை வாங்கலாம் என்று முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வாடிக்கையாளா்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதில்லை. அடுத்தமுறை அவா்கள் அமேஸானில் ரொக்கத்துக்குப் பொருள்களை வாங்கும்போது, அந்தப் பொருளை தருவதற்கு வரும் முகவரிடம் 2000 ரூபாய் நோட்டுகளைத் தந்து, மிச்சத் தொகையை அமேஸான்-பே இருப்பில் சோ்த்துக்கொள்ளலாம். அந்த வகையில், கேஒய்சி விதிமுறைகளை முழுமையாக நிறைவு செய்த வாடிக்கையாளா்கள் ரூ.50,000 வரை அமேஸான்-பே இருப்பில் 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்து சோ்த்துக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மாதம் 19-ஆம் தேதி அறிவித்த ரிசா்வ் வங்கி, தங்களிடமுள்ள அந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் வங்கியில் செலுத்தவோ, மாற்றிக்கொள்ளவோ செய்யலாம் என்று கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.