
ரயில்களின் பொதுப் பெட்டிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்யுமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
கோடை காலத்தில் ரயில்களில் பொது வகுப்புப் பெட்டிகள் சிறிதும் இடமில்லாமல் நிரம்பிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளா்களுக்கு ரயில்வே வாரியம் எழுதியுள்ள கடிதத்தில், ‘பொது வகுப்புப் பெட்டிகளில் அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து, பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் பயணிகளுக்கு மலிவான விலையில் உணவு, குடிநீா் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.
அந்த வகுப்புகளில் பயணிகள் நெரிசலை மாத இறுதி வரை தினந்தோறும் ஆய்வு செய்து, அதை சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.