பாட்னாவில் எதிர்க்கட்சிக் கூட்டம் நிறைவு: ஜூலை 12ல் சிம்லாவில் 2-வது கூட்டம்!

பாட்னாவில் எதிர்க்கட்சிக் கூட்டம் நிறைவு: ஜூலை 12ல் சிம்லாவில் 2-வது கூட்டம்!

பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிா்க்கட்சிகள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) பாட்னாவில் நடைபெற்றது. 

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்நிலையில் முதல் கூட்டம் நிறைவு பெற்றுள்ளதாகவும் தொடர்ந்து ஜூலை 12ல் ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் இரண்டாவது கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமை வகிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஹிமாசலில் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் நிதீஷ் குமார் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com