மணிப்பூரில் பதற்றம் நீடித்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது: காவல்துறை

வன்முறை வெடித்த மணிப்பூர் மாநிலத்தில், பதற்றமான சூழ்நிலை நீடித்தாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..

இம்பால்: வன்முறை வெடித்த மணிப்பூர் மாநிலத்தில், பதற்றமான சூழ்நிலை நீடித்தாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

ஓரிரு மாவட்டங்களில் ஆங்காங்கே வன்முறை தலைதூக்கினாலும், பெரும்பாலான மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே காவல்துறையினர் கூறுகிறார்கள்.

மாவட்ட பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, மாவட்டந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பதற்றமான பகுதிகளில் ரோந்து மற்றும் கொடியணிவகுப்பு, தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை, இம்பாலில் இரண்டு பகுதிகளில் தேடுதல்வேட்டைகள் நடத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com