
கஞ்சம் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்துக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்ததோடு, நிவாரணமும் அறிவித்துள்ளார்.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஞாயிறன்று இரவு இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 10-க்கு மேற்பட்டோர் பலியாகினர், எட்டு பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து முதல்வரின் அலுவல அறிக்கையின்படி,
பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
படிக்க: செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாள்கள் சிகிச்சை!
விபத்தில் பலியானோருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நிதியமைச்சர் விக்ரம் அருக், கஞ்சம் டிபிசிசி தலைவர் மற்றும் எம்.எல்.ஏ விக்ரம் பாண்டா ஆகியோர் உடனடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...