மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி

மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published on

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி முக்கிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் ஜல்பைகுரியில் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பின்னர் பஹ்டொக்ரா விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது அங்கு மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பு கருதி உடனடியாக பைகுந்தபூர் வனப்பகுதியில் சிவோக் ராணுவ தளத்தில் ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து மம்தா பானர்ஜி சாலை மார்க்கமாக பஹ்டொக்ரா விமான நிலையத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து விமானத்தில் கொல்கத்தா சென்றார்.

இந்நிலையில், விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட அதிர்வில் மம்தாவுக்கு முதுகுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com