உலகக் கோப்பை கிரிக்கெட்: அரசியல் தலையீட்டால் மொஹாலி புறந்தள்ளப்பட்டதா?

பஞ்சாப் மீதான பாகுபாட்டை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பஞ்சாப் விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்: அரசியல் தலையீட்டால் மொஹாலி புறந்தள்ளப்பட்டதா?

பஞ்சாப் மீதான பாகுபாட்டை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பஞ்சாப் விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் பஞ்சாபின் மொஹாலி கிரிக்கெட் விளையாட்டரங்கம் தவிர்க்கப்பட்டது அரசியல் தலையீடு காரணமாக இருக்கலாம், பஞ்சாப் மீதான பாகுபாட்டை எந்த விதத்திலும்  பொறுத்துக் கொள்ள முடியாது என பஞ்சாப் விளையாட்டு துறை அமைச்சர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் முதல் நவம்பர் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கவிருக்கிறது. இதற்கான  அட்டவணை, 100 நாள் கவுண்டனுடன் ஐசிசி நேற்று வெளியிட்டது, அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி விளையாட்டரங்கம் அக்டோபர் 5 ஆம் தொடங்கி, இதே மைதானத்தில்  நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் முடிவடைகிறது. இப்போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டதில் இருந்தே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குகிறது.

குறிப்பாக இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களான மொஹாலி, இந்தூர், ராஞ்சி, ராஜ்கோட், திருவனந்தபுரம் மற்றும் நாக்பூர் கிரிக்கெட் விளையாட்டரங்கங்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இந்த மைதானத்தின் அதிகாரிகள் ஏமாற்றம் அடைத்துள்ளனர்.

2011 பதிப்பில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிளாக்பஸ்டர் அரையிறுதி ஆட்டத்தை அரங்கேற்றிய மொஹாலி, இந்த வருட உலகக் கோப்பை போட்டிகளை தவறவிட்டுள்ளது.

இதை குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில விளையாட்டு துறை அமைச்சர் ஷ.குர்மீத் சிங்," உலகக் கோப்பை இந்தியாவுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் இந்திய கிரிக்கெட்டில் பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய மைதானம், நாட்டின் முதல் ஐந்து மைதானங்களில் ஒன்றாக இருந்த ஒரு மைதானம் ஒரு ஆட்டம் கூட கிடைக்கமால் ஓதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. 

மறுபக்கத்தில், அகமதாபாத்தில்உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கம் தொடக்க ஆட்டம் மற்றும் இறுதிப் போட்டி மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பெரிய ஆட்டங்கள்  நடைபெறுகிறது. ஏன் அண்டை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்திற்கு கூட ஐந்து ஆட்டங்களை ஒதுக்கியுள்ளீர்கள். ஆனால் பஞ்சாப் மாநிலத்திற்கு  ஒன்று கூட கிடைக்கவில்லை. பயிற்சி ஆட்டம் கூட,  இதன் மூலம் அரசியல் நடத்தப்படுவது தெளிவாகிறது" என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com