

ஸ்ரீநகரில் உள்ள ஜமா மசூதியில் இந்தாண்டும் ஈத் பெருநாள் தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மசூதி நிர்வாகக் குழு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
ஸ்ரீநகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈத்காவில் ஈத் தொழுகை இந்தாண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அஞ்சுமன் அவுகாஃப் ஜமா மசூதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வாணி ஈத் தொழுகைக்கு மூன்று நாளைக்குப் பிறகு பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். அவரது கொலை பல மாதங்களாக பள்ளத்தாக்கில் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இதனால் அவர் கொல்லப்பட்டதிலிருந்து, சட்டம் ஒழுங்கை கருத்தில்கொண்டு ஈத்காவில் ஈத் தொழுகைகள் நடைபெறுவதில்லை.
மேலும், ஈத் தொழுகைக்கு முன் ஈத்காவில் பாரம்பரியமாக ஈத் பிரசங்கத்தை வழங்கும் மிர்வைஸ், முகமது உமர் ஃபாரூக் ஆகியோர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருப்பதை அஞ்சுமன் கண்டித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்பின் 370வது பிரிவை 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அன்றுமுதல் மிர்வைஸ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.