சைபர் மோசடி கும்பலை பிடித்த காவல்துறைக்குக் காத்திருந்த அதிர்ச்சி
சைபர் மோசடி கும்பலை பிடித்த காவல்துறைக்குக் காத்திருந்த அதிர்ச்சி

சைபர் குற்றங்களிலும் 'பொன்னான நேரம்' முக்கியம்: மக்களே எச்சரிக்கை

சைபர் பிரிவு காவலர்கள் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்ததால், பணம் மீண்டும் பறிகொடுத்தவரின் கணக்குக்கே வந்து சேர்ந்தது.

மும்பை: ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியின் கிரெடிட் கார்டிலிருந்து திருடப்பட்ட ரூ.7.15 லட்சத்தை, சைபர் பிரிவு காவலர்கள் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்ததால், பணம் மீண்டும் பறிகொடுத்தவரின் கணக்குக்கே வந்து சேர்ந்தது.

மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியின் கிரெடிட் கார்டிலிருந்து ஒரு தனியார் வங்கியின் வங்கிக் கணக்குக்கு ரூ.7.15 லட்சம் மோசடியாக பரிமாற்றம் செய்யப்பட்டது.

இது குறித்து உடனடியாக சைபர் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அண்மையில் ஒரு தனியார் விடுதியில் அறை எடுக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த போது கையும் களவுமாகப்பிடிப்பட்டு, உடனடியாக அந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.

தனியார் வங்கியும், மோசடி குறித்து காவல்துறையினர் அளித்த முறைகேடுப் புகாரை பரிசீலித்து ரூ.7.06 லட்சத்தை பணத்தை இழந்த நபரின் வங்கிக் கணக்குக்கே வரவு வைத்துள்ளது.

இது குறித்து பணத்தை ஏமாந்த நபர் கூறுகையில், பிப்ரவரி 25ஆம் தேதி இரவு பணப்பரிமாற்றத்தின் மீது எனக்கு வங்கியிடமிருந்து அலர்ட் அழைப்பு வந்தது. ஆனால், அந்த அழைப்பில் கூறப்படும் தகவல் எனக்கு தெளிவாகக் கேட்கவில்லை. அதனால் எனது கிரெடிட் கார்டிலிருந்து மிகப்பெரிய தொகை பரிமாற்றம் செய்யப்பட்டது. உடனடியாக புகார் அளித்த நிலையில், காவலர்கள் பொன்னான நேரத்துக்குள் செயல்பட்டு, பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

இரவு 9 மணிக்கு பணம் பறிபோன நிலையில், 9.30 மணிக்கெல்லாம் சைபர் காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. உடனடியாக அவர்கள் தனியார் வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு, முறைகேடாகப் பணம் வரவு வைக்கப்பட்ட அந்த வங்கிக்கணக்கை முடக்க வைத்து, பணத்தைத் திரும்பத் தர நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com