பக்தர்களுடன் சாமி தரிசனம் செய்த விராட் கோலி, அனுஷ்கா! (விடியோ)

மத்தியப் பிரதேசத்திலுள்ள கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பக்தர்களுடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்தார். 
பக்தர்களுடன் சாமி தரிசனம் செய்த விராட் கோலி, அனுஷ்கா! (விடியோ)
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்திலுள்ள கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பக்தர்களுடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், கோயிலுக்கு அவர்கள் வருகை புரிந்த விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள உஜ்ஜைனி மஹாகாலேஷ்வர் கோயிலுக்கு விராட் கோலி, அனுஷ்கா சர்மா வருகை புரிந்தனர். அப்போது பக்தர்களுடன் காத்திருந்து இருவரும் சாமி தரிசனம் செய்தனர். இந்த விடியோ இணையத்தில் பரவி வருகிறது. 

மஹாகாலேஷ்வரை தரிசனம் செய்வதற்காக உஜ்ஜைனி வந்ததாக அனுஷ்கா சர்மா தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கு முன்பு விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களது குழந்தை வாமிகாவுடன் ரிஷிகேஷ், விருந்தாவனம் ஆன்மிக பயணம் மேற்கொண்டிருந்தனர். ரிஷிகேஷில் சுவாமி தயானந்த் ஆசிரமத்திற்கு சென்று வழிபட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com