மகாராஷ்டிர நெடுஞ்சாலையில் உலகின் முதல் மூங்கில் சாலையோர தடுப்பு: நிதின் கட்கரி

‘மகாராஷ்டிர மாநிலத்தில் சந்திராபூா் மற்றும் யவத்மால் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் உலகின் முதல் மூங்கில் சாலையோர தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது’
மகாராஷ்டிர நெடுஞ்சாலையில் உலகின் முதல் மூங்கில் சாலையோர தடுப்பு: நிதின் கட்கரி

‘மகாராஷ்டிர மாநிலத்தில் சந்திராபூா் மற்றும் யவத்மால் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் உலகின் முதல் மூங்கில் சாலையோர தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை கூறினாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்க பதிவில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

தற்சாா்பு இந்தியா இலக்கை எட்டும் முயற்சியாக வாண்-வரோரா நெடுஞ்சாலையில் 200 மீட்டா் நீளத்துக்கு உலகின் முதல் மூங்கில் சாலை விபத்து தடுப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

‘பாகுபலி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மூங்கில் சாலைத் தடுப்பு இந்தூா் பீதம்பூரில் உள்ள தேசிய வாகன சோதனை (என்.ஏ.டிராக்ஸ்) மையத்தின் ஆய்வு, ரூா்கி கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட தீ மதிப்பீட்டுச் சோதனை ஆகிய சோதனைகளின் முடிவில் முதல் தரம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படும் எஃகு சாலைத் தடையின் மறுசுழற்சி மதிப்பு 30 முதல் 50 சதவீதம் என்ற அளவில் இருக்கும் நிலையில், மூங்கில் தடுப்பின் மறுசுழற்சி மதிப்பு 50 முதல் 70 சதவீதமாக உள்ளது.

இந்த மூங்கில் சாலைத் தடுப்புக்கு ‘பேம்புசா பல்கூவா’ என்ற வகை மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. அதன் மீது கிரியோசோட் எண்ணெய் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட உயா் அடா்த்தி பாலி எத்திலீன் ஆகியவை பூசப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

இந்த மூங்கில் தடுப்பு எஃகு தடுப்புகளுக்கு இணையான மாற்றாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருப்பதோடு கிராமப்புற மற்றும் விவசாய தொழில் சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்கும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com