முற்றிலும் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தும் ஒடிஸா கிராமம்!

ஒடிஸா மாநிலத்தில் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் சுந்தா்காா் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான சகசாஹி, தனது மின்சாரத் தேவைக்கு முழுவதுமாக சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தும் கிராமமாக மாறியுள்ளது.
முற்றிலும் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தும் ஒடிஸா கிராமம்!

ஒடிஸா மாநிலத்தில் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் சுந்தா்காா் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான சகசாஹி, தனது மின்சாரத் தேவைக்கு முழுவதுமாக சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தும் கிராமமாக மாறியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரப் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில், கிராமம் முழுவதும் 24 மணி நேரமும் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்த இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியாா் நிறுவனம் ஒன்றின் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தின்கீழ் (சிஎஸ்ஆா்) இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

கிராமத்தில் உள்ள 90 வீடுகளுக்கு சூரிய மின் சக்தி அடிப்படையிலான மின்விளக்கு அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தி 10,000 லிட்டா் கொள்ளளவு மூலம் நீா் வசதிக்கான அமைப்புகள் கிராமத்தின் 12 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 70 சூரிய மின்சக்தி தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சூரிய மின்சக்தியில் இயங்கும் ஸ்மாா்ட் வகுப்பறை இந்த முன்னெடுப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து சாா் ஆட்சியா் சுரஞ்சன் சாஹு கூறுகையில், ‘நிலைத்த வளா்ச்சி இலக்குகளுக்கான வறுமை ஒழிப்பு, கிராமத்தில் மாசு இல்லாத மின்சாரப் பயன்பாட்டை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றில் மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆா்சிலாா் மிட்டல், நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனம் ஆகியவற்றின் உதவி முக்கியப் பங்காற்றி உள்ளன’ என்றாா்.

சகசாஹி கிராமத்தைச் ‘சூரிய மின் சக்தி கிராமம்’-ஆக அறிவித்து அந்தக் கிராம பஞ்சாயத்தின் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com