
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தேடப்பட்டு வந்த 6 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பழங்குடியினர் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தின் தத்தா கொல் பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் மீது பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்காக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ஆவார். இவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.