நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

குழந்தையைப் போல அழுகிறார்.. ராகுலை தாக்கிய ஷிவ்ராஜ் சிங் சௌகான்

ராகுல் காந்தியை தாக்கிப் பேசியிருக்கும் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான், காங்கிரஸ் தலைமையைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

News image

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் (கோப்புக்காட்சி)

Updated On :9 மார்ச் 2023, 6:16 pm IST

போபால்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை தாக்கிப் பேசியிருக்கும் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான், காங்கிரஸ் தலைமையைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

நமது நாட்டில் யாரும் கேட்பதில்லை என்பதல், வெளிநாட்டுக்குச் சென்று ராகுல் காந்தி பேசுகிறார். குழந்தைத்தனமாக பேசி, நாட்டை தலைகுனியச் செய்கிறார். இதைச் செய்ய விடவில்லை, அதைச் செய்யவிடவில்லை என்று கூறி குழந்தையைப் போல அழுகிறார், நீங்கள் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லுங்கள். ஆனால் நமது நாட்டு மக்களிடம் சொல்லுங்கள் என்று சௌகான் கூறியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நான் வெளிநாடு சென்றிருந்த போது, என்னிடம் ஒருவர் கேட்டார், அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் எதையும் சாதிக்காதவர் என்று. ஆனால் அதற்கு நான் என்ன பதில் சொன்னேன் தெரியுமா? ஒரு இந்திய பிரதமராக இருப்பவர் எதையும் சாதிக்காதவராக இல்லை என்று பதிலளித்தேன். ஏன் என்றால், அவர் இந்தியாவின் பிரதமர், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் அல்ல என்பதால் என்று சௌகான் பேசியுள்ளார்.

தோல்வி, நம்பிக்கையின்மையின் காரணமாகவே அவர் இவ்வாறு அழுதுள்ளார், காங்கிரஸ் தலைமையைப் பார்க்கும்போது எனக்கு பரிதாபமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.