ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சிறுவன் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 43 அடி ஆழத்தில் சிக்கிய நிலையில், சிறுவனை மீட்க  ஜேசிபி இயந்திரம் மூலம் அதற்கு இணையான குழி தோண்டப்பட்டது.

சுமார் 24 மணி நேரப் போரட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுவன், மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் உள்ள லேட்டரி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டுசெல்லப்பட்டான். 

சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com