கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்: மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாநிலத்தில் ஏற்கெனவே பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை முடிவு செய்வதற்கான கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தகூட்டத்தில் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், சித்தராமையா, முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில நாட்களில் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

அனைத்து சிட்டிங் எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்றும், ஒருசில சிட்டிங் எம்.எல்.ஏ.க்களை கட்சி கைவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "யாருடனும் கூட்டணி இல்லை. நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். நாங்கள் தனியாக (ஆட்சிக்கு) வருவோம்" என்று அவர் கூறினார். 2024 மக்களவைத் தேர்தலுக்கு கர்நாடக தேர்தல் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com