96% வழக்குகளில் குற்றத்தை நிரூபித்த அமலாக்கத் துறை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிறைவடைந்த 96 சதவீத வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையின் செயல்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
96% வழக்குகளில் குற்றத்தை நிரூபித்த அமலாக்கத் துறை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிறைவடைந்த 96 சதவீத வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையின் செயல்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமோசடித் தடுப்புச் சட்டம் (2002), அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (1999), தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் (2018) ஆகியவற்றை உரிய முறையில் அமல்படுத்தும் நடவடிக்கைகளை அமலாக்கத் துறை மேற்கொண்டு வருகிறது. அச்சட்டங்களின் கீழ் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான விவரங்களை அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது. அந்த விவரங்கள்:

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள்

பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5,906

நடத்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 531

பிறப்பிக்கப்பட்ட சோதனை வாரண்ட் எண்ணிக்கை 4,954

பிறப்பிக்கப்பட்ட சோதனை வாரண்ட்களின் சதவீதம் 8.99%

முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 176

முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளின் சதவீதம் 2.98%

சொத்து முடக்க உத்தரவுகளின் எண்ணிக்கை 1,919

முடக்கப்பட்ட சொத்துகள் ரூ.1.15 லட்சம் கோடி

நீதித்துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்ட சொத்து முடக்க உத்தரவுகள் 1,632

நீதித்துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு, முடக்கப்பட்ட சொத்துகள் ரூ.71,290 கோடி

நீதித்துறை அதிகாரிகள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள சொத்து முடக்க உத்தரவுகள் 260

நீதித்துறை அதிகாரிகள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.40,904 கோடி

கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 513

விசாரணை நிறைவடைந்த வழக்குகளின் எண்ணிக்கை 25

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 24

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட வழக்குகளின் விகிதம் 96%

தண்டனை விதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 45

குற்றம் நிரூபிக்கப்பட்டோரிடம் கைப்பற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.36.23 கோடி

குற்றம் நிரூபிக்கப்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.4.62 கோடி

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள்

நடத்தப்பட்ட விசாரணைகளின் எண்ணிக்கை 33,988

நிறைவுசெய்யப்பட்ட விசாரணைகளின் எண்ணிக்கை 16,148

பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் எண்ணிக்கை 8,440

நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்பட்ட நோட்டீஸ் எண்ணிக்கை 6,847

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள்

விசாரணை தொடங்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 15

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டோா் 9

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.862.43 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com